ருத்ரதாண்டவம் ஆடிய சுனில் நரைன்: 49 பந்தில் சதம் விளாசினார்

சுனில் நரைன் 30 பந்தில் அரைசதம் அடித்தார்.11 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார்.
ருத்ரதாண்டவம் ஆடிய சுனில் நரைன்: 49 பந்தில் சதம் விளாசினார்
Published on

ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்தல் செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், பிலிப் சால்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிலிப் சால்ட் 13 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி சிறப்பாக விளையாடி 18 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் சுனில் நரைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுனில் நரைன் 30 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 49 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஒவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது.

தொடர்ந்து விளையாடிய அவர் 56 பந்தில் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா 17.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com