அனல் பறக்கும் களம்.. குஜராத் - சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்! - எகிறும் எதிர்பார்ப்பு

இரு அணிகளுமே தலா 14 புள்​ளி​களை பெற்​றுள்​ளன.
அனல் பறக்கும் களம்.. குஜராத் - சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்! - எகிறும் எதிர்பார்ப்பு
Published on

ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில் ஆட்ட வீரர்கள் விறுவிறுப்பான ஆட்டத்தை ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்தில் குஜராத் - சன்ரைசஸ் அணிகள் இன்று மொத உள்ளனர்.

நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் நிகர ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2வது இடத்திலும், குஜராத் அணி 3வது இடத்திலும் இருக்கிறது. இந்த இரு அணிகளுமே தலா 14 புள்​ளி​களை பெற்​றுள்​ளன.

சன்ரைசர்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் 235 ரன்கள் குவித்து, 33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து 4 வெற்றிகளை குவித்து வலுவான நிலையில் உள்ளது. கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முகமது சிராஜ், காகிசோ ரபாடா ஆகியோரின் வேகம் மற்​றும் விக்​கெட் வீழ்த்​தும் திறன், மிடில் ஓவர்​களில் ரஷித் கானின் துல்லியம் மற்​றும் ஆட்​டத்​தின் போக்​கையே மாற்​றக்​கூடிய பந்​து​வீச்சு போன்ற சாதனைகளை படைத்த ஹைதராபாத் அணி நடப்பு சீசனில் 8 முறை 200 ரன்​களுக்கு மேல் குவித்து மிரட்டியுள்​ளது.

குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் மிகப்​பெரிய பலமே கேப்​டன் ஷுப்​மன் கில், சாய் சுதர்​சன் ஆகியோரும் மற்றும் சிறந்த ஆட்டக்காரர்களான ஜாஸ் பட்​லர், வாஷிங்​டன் சுந்​தர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் அந்த அணிக்கு பலம் அதிகரித்து வருகிறது.

சன்ரைசஸ் அணியின் முன்​வரிசை வீரர்​களான அபிஷேக் சர்​மா, டிரா​விஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்​ரிச் கிளாசன் ஆகியோர் குஜ​ராத் அணி​யின் பந்​து​வீச்சாளர்களுக்கு பெரும் அழுத்தத்தை கொடுப்பதாக தெரிவித்திருக்கிறது.

நடப்பு சீசனில் பந்துவீச்சாளரான இஷான் மலிங்கா 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் பாட் கம்​மின்​ஸ், ஷிவாங்க் குமார், ஷகிப் ஹுசைன் ஆகியோருடன் பலம் சேர்ந்து சிறந்த செயல்திறன் உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com