ரூ. 3.6 கோடிக்கு ஏலம் போன ராபின் மின்ஸ்.. யார் தெரியுமா?

ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்றது. குஜராத் அணியில் ராபின் மின்ஸ் தேர்வாகியுள்ளார்.
ரூ. 3.6 கோடிக்கு ஏலம் போன ராபின் மின்ஸ்.. யார் தெரியுமா?
Published on

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடி கிரிக்கெட் வீரர் ராபின் மின்ஸ்-ஐ குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.6 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது. 21 வயதான ராபின் ரூ. 20 லட்சம் எனும் அடிப்படை விலையில் ஏலத்தில் பட்டியலிடப்பட்டார். இவரை வாங்க பல அணிகள் போட்டியிட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

பெரிய ஷாட்களை அடிப்பதில் பெயர்பெற்ற ராபின் மின்ஸ் இடதுகை பேட்டர் ஆவார். மகேந்திர சிங் டோனியின் தீவிர ரசிகரான இவருக்கு அனுபவம் மிக்க முன்னாள் இந்திய அணி வீரர் சான்ச்சல் பட்டாச்சார்யா பயிற்சியாளராக உள்ளார். இவர் 19 மற்றும் 25 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜார்கண்ட் அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் தற்போது ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com