ஐபிஎல் 2023: லக்னோ அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்.சி.பி.

விராட் கோலி, கேப்டன் டூ பிளசிஸ் சிறப்பான துவக்கம் அளித்தனர். 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
விராட் கோலி, டூ பிளசிஸ்
விராட் கோலி, டூ பிளசிஸ்
Published on

லக்னோ:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக விராட் கோலி, கேப்டன் டூ பிளசிஸ் சிறப்பான துவக்கம் அளித்தனர். விராட் கோலி 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டூ பிளசிஸ் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். மறுமுனையில் அனுஜ் ராவத் 9 ரன்னிலும், கிளென் மேக்ஸ்வெல் 4 ரன்னிலும், பிரபுதேசாய் 6 ரன்னிலும் அவுட் ஆகினர்.

15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஆடுகளம் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டது. மழை நின்றதும் போட்டி தொடங்கியது. தொடர்ந்து ஆடிய டூ பிளசிஸ் 44 ரன்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, மகிபால் லாம்ரோர் 3 ரன், தினேஷ் கார்த்திக் 16 ரன், கரன் சர்மா 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது.

லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய், அமித் மித்ரா, நவீன் உல் ஹக் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்குகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com