ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே இப்படி ஆடுவார் என்று நினைக்கவில்லை- நிதிஷ் ராணா

ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன்.
ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே இப்படி ஆடுவார் என்று நினைக்கவில்லை- நிதிஷ் ராணா
Published on

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் 2-வது ராஜஸ்தான் அணி விளையாடியது. இதன் முதல் ஓவரை கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா வீசினார். அதில் 26 ஓட்டங்களை ராணா வழங்கியிருந்தார்.

ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும் என கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியுள்ளார்.

இது குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியிருப்பதாவது:-

ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஆட்டத்தில் அவர் என்ன நினைத்தாலும் அது நடந்தது. இந்த மைதானத்தில் 180 ரன்கள் அடித்தால் சரியாக இருக்கும் என்று ராசின் போது கூறினேன். ஆனால் எங்களது பேட்டிங் இன்று சிறப்பாக அமையவில்லை. இறுதியில் இரண்டு புள்ளிகளை நாங்கள் இழந்து விட்டோம்.

ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன்.

மேலும் பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரில் சுதாரித்து ஆடுவார்கள் என்று திட்டமிட்டேன். ஆனால் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே இப்படி ஆடுவார் என்று எனக்கு தெரியாது.

இவ்வாறு நிதிஷ் ராணா கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com