சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

மணீஷ் பாண்டே, அக்சர் பட்டேல் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் கைப்பற்றினார்.
மணீஷ் பாண்டே
மணீஷ் பாண்டே
Published on
<p>வாஷிங்டன் சுந்தர்</p>

ஐதராபாத்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர் பில் சால்ட் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் மற்றொரு துவக்க வீரர் வார்னர் 21 ரன்னிலும், அதிரடியாக ஆடிய மார்ஷ் 25 ரன்னும் சேர்த்தனர். சர்பராஸ் கான் 10, அமன் ஹகிம் கான் 4 என விரைவில் விக்கெட்டை இழந்தனர். 62 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.

அதன்பின் மணீஷ் பாண்டே, அக்சர் பட்டேல் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் தலா 34 ரன்கள் சேர்த்தனர். ரிபால் பட்டேல் 5 ரன், அன்ரிச் நோர்ட்ஜே 2 ரன்களில் ரன் அவுட் ஆக, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.

ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் கைப்பற்றினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட், நடராஜன் ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com