2-வது நாள் உணவு இடைவேளை- இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து திணறல்

ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.100-வது டெஸ்ட்டில் விளையாடும் புஜாரா 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
2-வது நாள் உணவு இடைவேளை- இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து திணறல்
Published on

புதுடெல்லி:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 263 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. உஸ்மான் கவாஜா 81 ரன்னும், பீட்டர் ஹேண்ட்ஸ்ஹோம் 72 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி 4 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்னும், லோகேஷ் ராகுல் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 242 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது.

இந்த டெஸ்டிலும் தொடக்க வீரர் ராகுல் ஏமாற்றம் அளித்தார். அவர் 17 ரன்னில் நாதன் லயன் பந்தில் பெவிலியன் திரும்பினார். 100-வது டெஸ்டில் விளையாடும் புஜாரா, ரோகித் சர்மாவும் லாதன் லயன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யரும் நிலைக்கவில்லை. அவரும் 4 ரன்னில் அவுட் ஆனார்.

இதனையடுத்து விராட் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றனர். உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 15 ரன்னிலும் விராட் கோலி 14 ரன்னிலும் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com