ICC | மார்ச் மாத சிறந்த வீரர் விருது வென்றார் சஞ்சு சாம்சன்

மார்ச் மாத பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா இடம்பிடித்தனர்.
ICC | மார்ச் மாத சிறந்த வீரர் விருது வென்றார் சஞ்சு சாம்சன்
Published on

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.

அதன்படி, மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் டி20 உலகக் கோப்பை போட்டியில் அசத்திய இந்தியாவின் சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கனோர் எஸ்டர்ஹய்ஜென் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதேபோல், சிறந்த வீராங்கனைக்காக போட்டியில் நியூசிலாந்தின் மெலியா கெர், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, தென் ஆப்பிரிக்காவின் அயபோங்கோ காகா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் சஞ்சு சாம்சன் மார்ச் மாத சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், நியூசிலாந்து கேப்டன் மெலியா கெர் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com