1St T20 | முதலாது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி

ஹர்மன்பிரீத் கவுர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 47 ரன்களை குவித்தார்.
1St T20 | முதலாது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா  அணி வெற்றி பெற 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி
Published on

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்தத் தொடரின் முதலாவது டி20 போட்டி டர்பனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வெர்மா ஜோடி சுமாரான தொடக்கத்தை கொடுத்தது. ஸ்மிருதி மந்தனா 13 ரன்களிலும், ஷபாலி வெர்மா 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 பந்துகளில் 36 ரன்களை அடித்தார்.

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 47 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களை சேர்த்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி சார்பில் அயபோகா காகா 3 விக்கெட்டுகளும், துமி செகுக்னே 2 விக்கெட்டுகளையும், நொன்குலுலெகோ லாபா 1 விக்கெட் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com