

இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
மழை காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கைவிடப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹாரி புரூக் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுக வீரராக களமிறங்குகிறார். இதன்மூலம் குறைந்த வயதில் இந்திய சீனியர் அணியில் அறிமுகம் ஆன வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்திய அணியின் விவரம் வருமாறு:
வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர், திலக் வர்மா ஷிவம் துபே, ஹர்ஷித் ரானா, அக்சர் படேல்,
ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி
இங்கிலாந்து அணியில் ஜோஷ் டாங் அறிமுகமாகிறார். ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.