இங்கிலாந்து அணிக்கு 191 ரன்கள் இலக்கு - அபிஷேக் ஷர்மா மற்றும் இஷன் கிஷான் அதிரடி

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா 24 பந்துகளில் 43 ரன்கள் அடித்து விளாசினார்.
இங்கிலாந்து அணிக்கு 191 ரன்கள் இலக்கு - அபிஷேக் ஷர்மா மற்றும் இஷன் கிஷான் அதிரடி
Published on

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி, இங்கிலாந்தில் உள்ள மேன்செஸ்டர் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மா 24 பந்துகளில் 43 ரன்கள் அடித்து விளாசினார்.

சர்வதேச போட்டியில் 15 வயதில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 10 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர், அணியை சரிவில் இருந்து மீட்டனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 22 பந்துகளில் 37 ரன்களும், இஷான் கிஷன் 40 பந்துகளில் 49 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர், வில் ஜாக்ஸ் மற்றும் லியாம் டாசன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com