

ஐசிசி-யின் கீழ் நடைபெறும் ஒவ்வொரு ஒருநாள் தொடருக்கு பிறகும் தரவரிசை வெளியிடப்படும். இந்த நிலையில் இன்று வருடாந்திர அப்டேட்டிற்குப் பிறகு ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.
இதில் இந்திய ஆண்கள் அணி தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. இந்தியா 118 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 113 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 109 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
தென்ஆப்பிரிக்கா 102 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது பாகிஸ்தான் 98 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது. வருடாந்திர தரவரிசைப் புதுப்பிப்பானது, மே 2025 முதல் விளையாடப்பட்ட போட்டிகளுக்கு முழுமையான முக்கியத்துவத்தை (100 சதவீதம் புள்ளிகள்) அளிக்கிறது. அதேவேளையில், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளின் முடிவுகளுக்குப் பாதி முக்கியத்துவம் (50 சதவீதம் புள்ளிகள்) வழங்கப்படுகிறது.