

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. ஜூலை 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார்.
பும்ரா இதற்கு முன்னதாக 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி கடைசியாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். சுமார் 2 3/4 வருடம் கழித்து அணியில் இடம் பிடித்துள்ளார். அடுத்த வருடம் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹர்சித் ராணா அணியில் இடம் பிடித்துள்ளார். காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடாத விராட் கோலிக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சதம் விளாசிய ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.