ஒருநாள் போட்டியில் அதிக முறை 400 ரன்: தென் ஆப்பிரிக்கா சாதனையை சமன்செய்த இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி முதல்முறையாக 400 ரன்களைக் கடந்தது.
ishan kishan, gill
Published on

இந்தியா ஆப்கானிஸ்தான் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று லக்னௌவில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 50 ஓவரில் 402 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் 154 ரன்னும், இஷான் கிஷன் 125 ரன்னும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி முதன் முறையாக 400 ரன்களைக் கடந்தது.

இந்நிலையில், இந்திய அணி சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் 8வது முறை 400 ரன்களைக் குவித்துள்ளது.

இதன்மூலம் அதிக முறை 400 ரன்களை அடித்த தென் ஆப்பிரிக்கா அணி சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com