முதலாவது டி20 போட்டி- இங்கிலாந்து மகளிர் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
முதலாவது டி20 போட்டி- இங்கிலாந்து மகளிர் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி
Published on

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டி செம்ஸ்ஃபோர்டில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணிக்கு துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா ரன் ஏதும் எடுக்காமலும், இவருடன் களமிறங்கிய ஷபாளி வெர்மா 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடர்ந்து களமிறங்கிய யாத்சிகா பாட்டியா 40 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். இவருடன் ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 40 பந்துகளில் 69 ரன்களை விளாசினார். இதனால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.

189 ரன்களை இலக்காக துரத்திய இங்கிலாந்து மகளிர் அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. முதலில் சொற்ப ரன்களில் 2 விக்கெட் இழந்த நிலையில், ஏமி ஜோன்ஸ் 48 பந்துகளில் 67 ரன்களை விளாசியது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தியது. இவரைத் தவிர்த்து ஹீத்தர் நைட் மற்றும் 22 ரன்களை சேர்த்தனர்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com