டி20 உலகக் கோப்பை: ஓய்வு முடிவு திரும்பப் பெற்ற தென்ஆப்பிரிக்கா வீராங்கனை இஸ்மாயில்

லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா மகளிர் அணியில் இஸ்மாயில் இடம்பெற்றுள்ளார்
டி20 உலகக் கோப்பை: ஓய்வு முடிவு திரும்பப் பெற்ற தென்ஆப்பிரிக்கா வீராங்கனை இஸ்மாயில்
Published on

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 12-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்த இஸ்மாயில் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ளார். இதனால் 15 பேர் கொண்ட உலகக் கோப்பைக்கான லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா குரூப் 1-ல் இடம் பிடித்துள்ளது. இதே குரூப்பில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான், இந்தியா, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளது. தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை மான்செஸ்டரில் எதிர்கொள்கிறது.

இஸ்மாயில் 113 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 123 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிக டி20 விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

உடல்நலக்குறைவு மற்றும் கால் தசை காயத்தில் இருந்து குணமடைந்துள்ள மரிசான் கேப் மற்றும் டேன் வான் நீகெர்க் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக விளையாடாத விக்கெட் கீப்பர்-பேட்டர் கரபோ மெசோவும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com