

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் 23-ஆவது போட்டியில் வங்கதேசம் மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகள் மோதின. மேன்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய திலாரா அக்தெர் 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய ஜௌரியா ஃபெர்டௌஸ் 31 பந்துகளில் 33 ரன்களை எடுத்தார். இவருடன் ஆடிய ஷோபனா மொஸ்தாரி 22 ரன்களை எடுத்தார்.
வங்கதேசம் பேட்டிங்:
அடுத்து வந்தவர்களில் கேப்டன் நிகர் சுல்தானா 27 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச மகளிர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ராதா யாதவ் 3 விக்கெட்டுளையும், ஸ்ரீ சராணி 2 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங் மற்றும் நந்தனி ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா வெற்றி:
137 எனும் எளிய இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணிக்கு ஷபாலி வெர்மா அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 53 ரன்களை குவித்தார். இவருடன் 18 பந்துகளில் 23 ரன்களை குவித்தார்.
ரிச்சா கோஷ் 10 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 ரன்களை விளாசினார். 16.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய மகளிர் அணி 39 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.