தடுமாறிய இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்திய கேப்டன் நாட் சிவர் - ஆஸ்திரேலியாவிற்கு 151 ரன்கள் இலக்கு

ஐசிசி மகளிர் டி20 போட்டியில் முதல் இன்னிங்ஸில் நிதானமாக ஆடிய இங்கிலாந்து அணி
Nat Sciver, Freya Kemp lift England to 150 vs Australia
Published on

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை போட்டி 2026 இறுதி போட்டி இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது.

குரூப் பிரிவில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில், தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதின.

இதையடுத்து டாஸ் வென்ற ஆஸ்திரேலியின் அணியின் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இந்நிலையில் தடுமாறி கொண்டிருந்த இங்கிலாந்து அணியை, கேப்டன் நாட் சிவர் இறுதி வரை நின்று 53 பந்துகளில் 58 ரன்கள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

அவருடன் ஜோடி சேர்ந்த ஃப்ரேயா கெம்ப் 28 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அதிரடியாக விளையாடினார்.

இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா அணியில் பந்து வீச்சை பொறுத்தவரை கேப்டன் கிம் சோஃபி மோலினக்ஸ், கிம் கார்த், லூசி ஹாமில்டன், அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com