ஐசிசி தரவரிசை: டாப் 10-ல் முன்னேறிய ஆஸி, வீரர்கள்.. பின்னடைவை சந்தித்த இந்தியர்கள்

4-வது இடத்தில் இருந்த ஜெய்ஸ்வால் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி 21-வது இடத்திலும் ரோகித் சர்மா 35-வது இடத்திற்கு தள்ளப்பட்டனர்.
ஐசிசி தரவரிசை: டாப் 10-ல் முன்னேறிய ஆஸி, வீரர்கள்.. பின்னடைவை சந்தித்த இந்தியர்கள்
Published on

ஆண்களுக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். 4-வது இடத்தில் இருந்த ஜெய்ஸ்வால் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அவரது இடத்தை ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்(4-வது இடம்) பிடித்துள்ளார்.

டாப் 10-ல் இடம் பெறாமல் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் 10-வது இடத்தை பிடித்துள்ளார். 10-ல் இடம் பெற்றிருந்த ரிஷப் பண்ட் 2 இடங்கள் பின் தங்கி 12-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான சுப்மன் கில் 4 இடங்கள் பின் தங்கி 20-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 21-வது இடத்திலும் ரோகித் சர்மா 35-வது இடத்திற்கு தள்ளப்பட்டனர்.

ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. தென் ஆப்பிரிக்க வீரர் கிளாசன் 8 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். இதில் 2,3,4 இடங்கள் முறையே ரோகித், விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோரும் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமும் உள்ளனர்.

டி20 தரவரிசையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. இந்திய அணியின் சஞ்சு சாம்சன் 18-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஜடேஜா 4 இடங்கள் பின் தங்கி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதில் முதல் இடத்தில் பும்ராவும் 5-வது இடத்தில் அஸ்வினும் தொடர்கின்றனர். ஒருநாள் தரவரிசையில் குல்தீப் யாதவ் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். டி20 தரவரிசையில் வங்கதேச வீரர் மகேதி ஹசன் 13 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தையும் டஷ்கின் அகமது 7 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com