பிப்ரவரி மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை வெல்வாரா சுப்மன் கில்?

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐ.சி.சி. வழங்கி வருகிறது. பிப்ரவரி மாதத்திற்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
பிப்ரவரி மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை வெல்வாரா சுப்மன் கில்?
Published on

துபாய்:

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.

சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித் (இலங்கை டெஸ்ட் தொடரில் 141, 131, ரன் எடுத்தார். நியூசிலாந்தின் பிலிப்ஸ் கடைசி 5 போட்டிகளில் 236 ரன்கள் குவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு தாய்லாந்தின் திபாச்சா, ஆஸ்திரேலியாவின் அலானா கிங் மற்றும் அனாபெல் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com