ICC |மார்ச் மாத சிறந்த வீரர் விருது வெல்லப் போவது பும்ராவா, சஞ்சு சாம்சனா?

மார்ச் மாத பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா இடம்பிடித்துள்ளனர்.
சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா
சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா
Published on

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.

அதன்படி, மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் டி20 உலகக் கோப்பை போட்டியில் அசத்திய இந்தியாவின் சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கனோர் எஸ்டர்ஹய்ஜென் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதேபோல், சிறந்த வீராங்கனைக்காக போட்டியில் நியூசிலாந்தின் அமெலியா கர், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, தென் ஆப்பிரிக்காவின் அயபோங்கோ காகா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இவர்களில் ஐ.சி.சி. விருது யாருக்கு என்பதை ரசிகர்கள், கமிட்டியினர் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com