

அயர்லாந்து அணிக்காக நான்கு வருடமாக தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ஹென்ரிச் மலான், தனது பதவியில் இருந்த விலக முடிவு செய்துள்ளார்.
ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய டி20 அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதுதான் ஷ்ரேயாஸ் அய்யருக்கு முதல் தொடராகும். அதோடு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின் விளையாடும் முதல் தொடராகும். கத்துக்குட்டி அணியான அயர்லாந்தை இந்தியா எளிதாக வீழ்த்தி, அந்த உற்சாகத்துடன் இங்கிலாந்து தொடருக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. முதல் போட்டியில் அயர்லாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடி இந்திய அணி 18.5 ஓவரில் 148 ரன்களில் சுருண்டது. இதனால் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதுதான் இந்தியாவுக்கு எதிரான அயர்லாந்தின் முதல் வெற்றியாகும்.
இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து 154 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய இந்தியா 153 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் தோல்வியடைந்தது. கடைசி 4 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ஹர்சித் ராணா ஆட்டமிழந்தார். கடைசி பந்தை பிரின்ஸ் யாதவ் சிக்சருக்கு தூக்கினார். என்றாலும் 1 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் அயர்லாந்து இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. அயர்லாந்து அணிக்கு கடந்த 4 வருடமாக ஹென்ரிச் மலான் பயிற்சியாளராக இருந்து வந்தார். அவர் தலைமையில்தான் அயர்லாந்து அணி பலமடைந்து இந்தியாவை சாதித்துள்ளது. அயர்லாந்து வீரர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வரும் நிலையில், ஹென்ரிச் மலான் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக இருப்பதாக முடிவு செய்துள்ளார். இது அந்த அணி வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.