உலகக் கோப்பையில் என்னுடன் நின்றவர்கள் நீங்கள்... வான்கடே ஊழியர்களுக்கு பரிசு வழங்கிய பாண்ட்யா

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, மும்பை வான்கடே மைதான ஊழியர்களுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றி உள்ளார்.
உலகக் கோப்பையில் என்னுடன் நின்றவர்கள் நீங்கள்... வான்கடே ஊழியர்களுக்கு பரிசு வழங்கிய பாண்ட்யா
Published on

மும்பை:

2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கான தீவிர பயிற்சியில் ஹர்திக் பாண்ட்யா ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் வான்கடே மைதானத்தின் ஊழியர்கள். நீண்ட இரவுகள் பாராமல், அவருக்காக ஆடுகளத்தைத் தயார் செய்து, பயிற்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர்கள் செய்து வந்தனர்.

அந்தச் சமயத்தில், உலகக்கோப்பை முடிந்ததும் உங்களுக்காக ஒரு சிறப்புப் பரிசை வழங்குவேன் என அவர்களுக்கு ஹர்திக் வாக்கு அளித்திருந்தார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிந்து திரும்பியுள்ள ஹர்திக் பாண்ட்யா, அந்த ஊழியர்களை நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மைதான ஊழியருக்கும் தலா ஒரு தங்க நாணயம் மற்றும் கணிசமான ஊக்கத்தொகையை பரிசாக வழங்கியுள்ளார்.

இது குறித்து ஹர்திக் பேசியதாவது:- நான் கடினமாக உழைத்தபோது என்னுடன் நின்றவர்கள் நீங்கள். இந்த வெற்றி உங்களுக்கும் உரியது" என ஊழியர்களிடம் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com