காதலி மஹிகா சர்மாவுக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த ஹர்திக் பாண்ட்யா

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மஹிகா சர்மாவை காதலித்து வரும் நிலையில், எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறார்
காதலி மஹிகா சர்மாவுக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த ஹர்திக் பாண்ட்யா
Published on

இந்திய ஒயிட்பால் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக விளங்கும் ஹர்திக் பாண்ட்யா தனது மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சை கடந்த 2024-ம் ஆண்டு பிரிந்தார். அதன்பின் மஹிகா சர்மாவுடன் காணப்பட்டார். தற்போது இருவரும் காதலித்து வருகின்றனர்.

டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இருவரும் ஒன்றாக மைதானத்தில் சுற்றி வந்தனர். தற்போது ஐபிஎல் தொடர் தொடங்கியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா உள்ளார். மும்பை இந்தியன்ஸ் விளையாடும் போட்டிகளை காண மஹிகா சர்மா செல்ல வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹிகா சர்மாவக்கு Mercedes-Benz V-Class காரை பரிசாக அளித்துள்ளார். இது இந்தியாவின் முதல் Mercedes-Benz V-Class கார் ஆகும். இதன் விலை சுமார் 1.7 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com