ஓய்வு முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது

சர்பராஸ் அகமது
சர்பராஸ் அகமது
Published on
Summary

ஓய்வு முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது விரைவில் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட உள்ளார்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சர்பராஸ் கான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் கடந்த 2023-ம் ஆண்டு பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார்.

இவரது தலைமயில் பாகிஸ்தான் இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 2006-ல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கு உலகக் கோப்பைமற்றும் 2017-ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றுள்ளது.

தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளதால், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்ட இருக்கிறார்.

கராச்சியை சேர்ந்த இவர் பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பாகிஸ்தான் அணி கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com