

அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. 128 வருடங்களுக்குப் பிறகு இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுகிறது. டி20 கிரிக்கெட் வடிவில் போட்டி நடைபெறும். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த போட்டியில் 6 அணிகள் இடம் பெறும்.
தற்போது இங்கிலாந்தில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்திய அணி குரூப் 1-ல் இட்ம பிடித்திருந்தது. இதேபிரிவில் மேலும் 5 அணிகள் இடம் பிடித்திருந்தது. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால், 3-வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. குரூப் 2-ல் இருந்து இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முன்னேறியுள்ளன.
இந்த நிலையில்் உலக கோப்பை போட்டிகள் முடிவை வைத்து இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
இந்தியா ஆசிய கண்டத்தில் முதல் அணி, இங்கிலாந்து ஐரோப்பிய கண்டத்தில் முதல் அணி, தென்ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கா கண்டத்தில் முதல் அணி, ஆஸ்திரேலியா ஓசியானியா கண்டத்தில் முதல் அணி என்ற வகையில் தகுதி பெற்றுள்ளன.
அமெரிக்கா போட்டியை நடத்தும் அணி என்ற வகையில் தகுதி பெற்றுள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட கால வரைக்குள் ஐசிசி-யின் 15 வரிசைக்குள் வர வேண்டும். இல்லை என்றால் முன்னிலையில் இருக்கும் அணி தகுதி பெறும். அதற்கான காலவரை 30 ஜூன் 2026 முதல் 2026 டிசம்பர் 31-ந்தேதி வரை ஆகும். 6-வது அணி 2027-ல் நடெபறும் ஐசிசி ஒலிம்பிக் குவாலிபையர் தொடர் மூலம் தேர்வு செய்யப்படும்.
வெஸ்ட் இண்டீசில் குவாலிபையர் தொடர் நடைபெற இருக்கிறது.