ENGvsIND 5th Test கடினமான ஆடுகளத்தில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால்..!

முதல் இன்னிங்சில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.2ஆவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 127 பந்தில் சதம் அடித்தார்.
ENGvsIND 5th Test கடினமான ஆடுகளத்தில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால்..!
Published on

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜெய்ஸ்வால் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 247 ரன்னில் ஆல்அவுட் ஆனது. முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடுகளத்தில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆனதால் பேட்ஸ்மேன்கள் திணறினர். இருந்தாலும் ஜெய்ஸ்வால் தன்னம்பிக்கையுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நேற்றைய 2ஆவது நாள் ஆட்டத்தில் 44 பந்தில் அரைசதம் அடித்தார். அத்துடன் 51 ரன்களுடன் நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஆகாஷ் தீப் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இன்று 5ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 70 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜெய்ஸ்வால் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆகாஷ் தீப் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் சுப்மன் கில் 11 ரன்னில் வெளியேறினார். ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 127 பந்தில் சதம் விளாசினார். அவரது சதத்தில் 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

24ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜெய்ஸ்வாலின் 6ஆவது சதம் இதுவாகும். இந்த தொடரில் ஜெய்ஸ்வாலின் 2ஆவது சதம் இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com