

மகளிர் டி20 உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி பாகிஸ்தானை வருகிற 14-ந்தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டி பர்மிங்காமில் நடைபெற இருக்கிறது.
பொதுவாக இந்திய அணிக்கு இங்கிலாந்து கண்டிசன் கடும் சவாலாக இருக்கும் எனக் கூறப்படும். ஆனால், அது நீண்ட காலத்திற்கு அப்படி இருக்க முடியாது. இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று அஞ்சும் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஞ்சும் சோப்ரா கூறியதாவது:-
இங்கிலாந்து சூழ்நிலைகள் (conditions) அந்நியமானவைகள் அல்ல. சில அல்லது பெரும்பாலான இந்திய வீராங்கனைகள் இங்கிலாந்தில் விளையாடி இருக்கிறார்கள். நந்தினி சர்மா இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார். குறைந்த போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஸ்ரீ சாரணி, கடந்த 12 மாதத்திற்குள் 2-வது முறையாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
என்னைப் பொறுத்தவரையில், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பான அணிகளில் ஒன்று. டாப் 4 அணிகளில் ஒன்று என்பது மட்டுமல்ல, டாப் 2 அதன்பின் சாம்பியன் என்பதை விரும்புகிறேன்.
இவ்வாறு அஞ்சும் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கண்டிசன் நீண்ட காலத்தித்திற்கு அந்நியமானவையாக இருக்காது என்று அஞ்சும் சோப்ரா தெரிவித்துள்ளார்.