5வது போட்டி மழையால் கைவிடப்பட்டது: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

5வது போட்டி மழையால் கைவிடப்பட்டது: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் ஆடிய போது மழை பெய்தது.
Published on

செயிண்ட் லூசியா:

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

அடுத்து நடந்த டி20 தொடரில் இங்கிலாந்து 3-1 என கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து 3-1 என கைப்பற்றியது. தொடர் நாயகன் விருதை சாகிப் மஹ்முதுவுக்கு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com