

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையை வெளியிட்டள்ளது. தென்ஆப்பிரிக்காவில் கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்தியா, இங்கிலாந்தை விட 4 புள்ளிகள் பின்தங்கி 3-வது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை தொடருக்குப் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் தோல்வயிடைந்து ஏமாற்றம் அடைந்தது.
ஆஸ்திரேலியா 163 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து ஒரு புள்ளியில் இருந்து நான்கு புள்ளிகள் முன்னேறி 128 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 124 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 100 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.