இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் கோல்ஸ் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
james coles
Published on

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதலில் இரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடந்துவருகிறது. முத டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தியா உடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் கோல்ஸ் அறிமுக வீரராக களமிறங்குகிறார். ஜோப்ரா ஆர்ச்சரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் விவரம் வருமாறு:

ஹாரி புரூக் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜாஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், சாம் கர்ரன், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், அடில் ரஷித், ஜோ ரூட், ஜோஷ் டாங்க்

முதல் ஒருநாள் போட்டி ஜூலை 14ம் தேதியும், 2வது ஒருநாள் போட்டி 16ம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி 19-ம் தேதியும் நடைபெற உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com