மகளிர் டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இங்கிலாந்து

இங்கிலாந்தின் டானி வியாட் ஹாட்ஜ் ஆட்ட நாயகி விருது வென்றார்.
danni wyat-hodge
Published on

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகள் உள்ளன.

இங்கிலாந்து அணி இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தியது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டானி வியாட் ஹாட்ஜ் 65 ரன்கள் எடுத்தார். ஹீதர் நைட் 45 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசியது.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 148 ரன்களே எடுத்தது. இதனால் 38 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் 8 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்ட நாயகி விருது டானி வியாட் ஹாட்ஜுக்கு அளிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com