மகளிர் டி20 உலகக் கோப்பை: 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தது.
nat sciver brunt
Published on

மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த அரையிறுதியில் இங்கிலாந்து அணி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்கா உடன் மோதியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நாட் சீவர் பிரண்ட் 75 ரன்னும், ஹீதர் நைட் 58 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. ஆட்ட நாயகி விருது நாட் சீவர் பிரண்டுக்கு வழங்கப்பட்டது.

வரும் 5-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com