

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டாம் லாதம், டேவன் கான்வே ஆகியோர் சதமடித்து அசத்தினர். டேவன் கான்வே 157 ரன்னும், டாம் லாதம் 151 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எமிலொ கே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கெட்டுடன் ஜேக்கப் பெத்தேல் ஜோடி சேர்ந்தார். 2வது விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் சதமடித்து 113 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து பெத்தேல் 74 ரன்னில் வெளியேறினார்.
ஜோ ரூட் 24 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 15 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஹாரி புரூக் அரை சதம் கடந்து 58 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 354 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டும், வில்லியம் ரூர்கி, ஜகாரி போக்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
84 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.