3-வது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து: தொடரையும் கைப்பற்றியது

இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 212 ரன்களில் சுருண்டதால் நியூசிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து வீரர்கள்
நியூசிலாந்து வீரர்கள்
Published on

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 354 ரன்கள் குவிப்பு

3-வது மற்றும் கடைசி போட்டி கடந்த 25-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 438 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 354 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

இங்கிலாந்துக்கு 373 ரன்கள் வெற்றி இலக்கு

இதனால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 84 ரன்கள் முன்னிலைப் பெற்றது. ஆனால் 2-வது இன்னிங்சில் அந்த அணியால் ரன்கள் குவிக்க இயலவில்லை. 9 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்துக்கு 373 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 9 ரன்களுடனும், எமிலியோ கே 6 ரன்களுடனும் களத்தில் இருந்தது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 270 ரன்கள் தேவைப்பட்டது.

இன்று கடைசி நாள்

இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எமிலியோ 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஸ்மித் களம் இறங்கினார். இதே ஓவரின் 5-வது பந்தில் ஜோ ரூட் ரன்அவுட் ஆனார். அவர் 18 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் இங்கிலாந்து தடுமாற்றத்தை சந்தித்தது.

ஸ்மித் மட்டும் தாக்குப்பிடித்து 60 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 212 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

டேரில் மிட்செல் ஆட்ட நாயகன் விருதையும், ஆர்ச்சர் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com