சாய் சுதர்சன் விளாசல் - திண்டுக்கல் வெற்றி பெற 207 ரன்களை நிர்ணயித்தது கோவை

டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் ஆடிய கோவை அணி 206 ரன்களை குவித்தது.
சாய் சுதர்சன் விளாசல் - திண்டுக்கல் வெற்றி பெற 207 ரன்களை நிர்ணயித்தது கோவை
Published on

சேலம்:

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நத்தம் (திண்டுக்கல்), சேலம், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடத்தப்படுகிறது.

சேலத்தில் இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் 23 ரன்னும், சுஜய் 31 ரன்னும், ராம் அர்விந்த 4 ரன்னும் எடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சாய் சுதர்சன், முகிலேஷ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. 4-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில் முகிலேஷ் 34 ரன்னில் அவுட்டானார்.

அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் அரை சதம் கடந்தார். சாய் சுதர்சன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்களை குவித்தது. ஷாருக் கான் 18 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com