ஸ்ரேயாஸ் அய்யரை டெல்லி அணி ஏலத்தில் எடுக்கும்- சுனில் கவாஸ்கர் கணிப்பு

ஏலத்தில் டெல்லி அணி நிர்வாகம் ஆர்.டி.எம். கார்டு மூலம் ரிஷப் பண்டை மீண்டும் இழுக்க முயற்சிப்பார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் ஏற்கனவே கொல்கத்தா அணியை வழிநடத்தி வெற்றி தேடித்தந்துள்ளார்.
ஸ்ரேயாஸ் அய்யரை டெல்லி அணி ஏலத்தில் எடுக்கும்- சுனில் கவாஸ்கர் கணிப்பு
Published on

மும்பை:

ஐ.பி.எல் கிரிக்கெட்டுக்கான வீரர்களின் ஏலம் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் சவுதிஅரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர், டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் லோகேஷ் ராகுல் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்கவைக்காததால் இவர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இவர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், 'ஏலத்தில் டெல்லி அணி நிர்வாகம் ஆர்.டி.எம். கார்டு மூலம் ரிஷப் பண்டை மீண்டும் இழுக்க முயற்சிப்பார்கள். அவர் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் இலக்கு ஸ்ரேயாஸ் அய்யர் இருப்பார். ஏனெனில் டெல்லிக்கு இப்போது கேப்டன் தேவை. ஸ்ரேயாஸ் அய்யர் ஏற்கனவே கொல்கத்தா அணியை வழிநடத்தி வெற்றி தேடித்தந்துள்ளார். அதேசமயம் கொல்கத்தா அணியும் ஆர்.டி.எம். வாய்ப்பை பயன்படுத்தி ஸ்ரேயாஸ் அய்யரை எடுக்க முயற்சிக்கலாம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com