டெல்லி அணி அபார பந்துவீச்சு - கொல்கத்தா அணியை 127 ரன்களில் கட்டுப்படுத்தியது

முதலில் ஆடிய கொல்கத்தா 127 ரன்கள் எடுத்தது. ஜேசன் ராய் அதிகபட்சமாக 43 ரன்கள் சேர்த்தார்.
டெல்லி அணி அபார பந்துவீச்சு - கொல்கத்தா அணியை 127 ரன்களில் கட்டுப்படுத்தியது
Published on

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் இன்று இரவு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நிதானமாக ஆடினார். அவர் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். யாரும் நிலைத்து நிற்கவில்லை. கடைசி கட்டத்தில் ஆண்ட்ரு ரசல் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 127 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com