டிஎஸ்பி ஆக இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா நியமனம்

தீப்தியின் சாதனைகளைப் பாராட்டி, உத்தரப் பிரதேச அரசு 3 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கியது.துணை எஸ்பி பதவிக்கான நியமனக் கடிதமும் வழங்கி கவுரவித்தது.
டிஎஸ்பி ஆக இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா நியமனம்
Published on

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை தீப்தி சர்மா. இவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். மேலும் இங்கிலாந்தின் பர்மிங்காமில் 2023 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வெல்ல தீப்தி முக்கியப் பங்காற்றினார்.

இந்நிலையில் தீப்தி சர்மாவுக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு சிறப்பு கவுரவம் செய்துள்ளது. தீப்தியின் சாதனைகளைப் பாராட்டி, உத்தரப் பிரதேச அரசு, 3 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், துணை எஸ்பி பதவிக்கான நியமனக் கடிதமும் வழங்கி கவுரவித்தது.

இதன்மூலம் தீப்தி சர்மாவின் சிறுவயது கனவு நனவாகியது. உத்தரபிரதேசத்தில் அவருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) சீருடை வழங்கப்பட்டது. இந்த பதவிக்காக உத்தரபிரதேச அரசுக்கு தீப்தி நன்றி கூறினார். மேலும் இதற்காக நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் எனவும் அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com