விராட் கோலி, லாம்ரோர் அரைசதம் - பெங்களூரு அணி 181 ரன்கள் குவிப்பு

டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆர்சிபி அணி 181 ரன்களை எடுத்தது.
விராட் கோலி, லாம்ரோர் அரைசதம் - பெங்களூரு அணி 181 ரன்கள் குவிப்பு
Published on

புதுடெல்லி:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூ பிளசிஸ் பொறுப்புடன் ஆடினர். அணியின் எண்ணிக்கை 82 ஆக இருக்கும்போது டூ பிளசிஸ் 45 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

விராட் கோலியுடன் லாம்ரோர் ஜோடி சேர்ந்தார். 3வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி 55 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்களை குவித்தது. லாம்ரோர் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com