சிக்ஸா...! வருத்தப்பட்ட கே.எல். ராகுல்

115 பந்தில் 95 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதுவிராட் கோலி 116 பந்தில் 85 ரன்கள் சேர்த்தார்
சிக்ஸா...! வருத்தப்பட்ட கே.எல். ராகுல்
Published on

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கே.எல். ராகுல் 97 ரன்கள் அடித்து சதம் அடிக்க முடியாமல் போனது. அவர் 91 ரன்கள் இருக்கும்போது, இந்தியாவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அவர் சதம் அடிக்க 9 ரன்கள் தேவைப்பட்டது.

41-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் முதலில் ஒரு பவுண்டரி அடிக்க வேண்டும். ஸ்கோர் சமன் ஆகிவிடும். அதன்பின் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். அதோடு சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என கே.எல். ராகுல் நினைத்தார்.

ஆனால், 2-வது பந்தை ஆஃப் சைடு தூக்கி அடித்தார். பந்து பவுண்டரிக்கு போகும் என நினைத்தார். ஆனால், லைனை தாண்டி சிக்ஸ் சென்று விட்டது. இந்தியா 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல். ராகுல் 97 ரன்கள் எடுத்தார்.

சிக்ஸ் சென்றதும், அடடே... சிக்ஸ் போய்விட்டதே... என கவலையில் அப்படியே உட்கார்ந்தார். அதன்பின் ஹர்திக் பாண்ட்யா உடன் வெற்றியை பகிர்ந்து கொண்டார்.

இந்தியா 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்த நிலையில், கே.எல். ராகுல்- விராட் கோலி ஜோடி அபாரமான விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com