IPL 2026 | தொடர் வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் மும்பையை முந்திய சி.எஸ்.கே.

டெவால்டு பிரெவிஸ் 29 பந்துகளில் 41 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்தார்.
IPL 2026 | தொடர் வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் மும்பையை முந்திய சி.எஸ்.கே.
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 22-ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இவருடன் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 48 ரன்கள் (4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார்.

அடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 38 ரன்கள் (6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்), டெவால்டு பிரெவிஸ் 29 பந்துகளில் 41 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்தனர்.

இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகள், வைபவ் அரோரா, அன்குல் ராய் மற்றும் சுனில் நரேன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

193 ரன்களை துரத்திய கொல்கத்தா அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் ஃபின் ஆலென் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சுனில் நரேன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களில் ரஹானே மற்றும் ஆங்ரிஷ் முறையே 28 மற்றும் 27 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

போட்டி முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வத்தியசத்தில் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து புள்ளிகள் பட்டியலில் தற்போது 8-ஆவது இடத்தில் உள்ளது. மறுப்பக்கம் 4-இல் 3 போட்டிகளில் தோல்வியுற்ற மும்பை அணி 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com