சிலம்பரசன் 5 விக்கெட் வீழ்த்தி அபாரம் - 58 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது சேப்பாக்

முதலில் ஆடிய சேப்பாக் 129 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆடிய திருச்சி 71 ரன்னில் ஆல் அவுட்டானது.
சிலம்பரசன் 5 விக்கெட் வீழ்த்தி அபாரம் - 58 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது சேப்பாக்
Published on

நெல்லை:

நெல்லையில் இன்று 25-வது லீக் போட்டி இரவு 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது. சிபி 31, சசிதேவ் 25 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. சேப்பாக் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் திருச்சி அணி சிக்கியது. குறிப்பாக, சிலம்பரசன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இறுதியில் திருச்சி அணி 71 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சேப்பாக் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது சேப்பாக் அணி பெறும் 3வது வெற்றி ஆகும்.

திருச்சி அணி தான் ஆடிய 6 ஆட்டங்களில் அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com