முகமது ரிஸ்வானுக்கு எதிராக "ஜெய் ஸ்ரீராம்" கோஷம் எழுப்பிய ரசிகர்கள்: வலுக்கும் கண்டனம்

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அப்போது ரசிகர்கள் சிலர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
முகமது ரிஸ்வானுக்கு எதிராக "ஜெய் ஸ்ரீராம்" கோஷம் எழுப்பிய ரசிகர்கள்: வலுக்கும் கண்டனம்
Published on

அகமதாபாத்:

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் பரவி வருகின்றன.

விருந்தோம்பலுக்கு பெயர் போன இந்தியாவில், முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டதற்கு பலரும் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com