டி20 உலகக்கோப்பையை புறக்கணித்த வங்கதேசம்: விசாரணை நடத்த விளையாட்டு அமைச்சகம் கமிட்டி அமைப்பு

வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியதற்கான காரணத்தை கண்டறிய 3 பேர் கொண்ட குழுவை அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பையை புறக்கணித்த வங்கதேசம்: விசாரணை நடத்த விளையாட்டு அமைச்சகம் கமிட்டி அமைப்பு
Published on

இந்தியா மற்றும் இலங்கையில் இந்த வருடம் தொடக்கத்தில் டி20 உலகக் கோப்ப கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக வங்கதேச நாட்டில் அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலை ஏற்பட்டது. இதனால் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நிறுவப்பட்டது. இந்துக்கள் தாக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமானை நீக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பு என்று வலியுறுத்தியது. இதனால் கேகேஆர் அணி அவரை விடுவித்தது.

இதனால் வங்கதேசம் அணி பாதுகாப்பு காரணத்தை மேற்கொள் காட்டி இந்தியா வந்து விளையாட மறுப்பு தெரிவித்தது. அத்துடன் நாங்கள் லீக் போட்டிகள் அனைத்தையும் இலங்கையில் விளையாடுகிறோம் என கோரிக்கை வைத்தது. ஆனால், ஐசிசி இந்த கோரிக்கையை நிராகரித்தது. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது, ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை வங்கதேசம் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

வங்கதேசம் ராஜாங்கரீதியிலான தோல்வியால் புறக்கணித்தா? அல்லது வேறு காரணமா? என்பதை கண்டறிய குழு அமைக்கப்பட்டதாக அமைச்சர் அமினுல் ஹக் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com