அடுத்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் ஐபிஎல் தொடர்: பிசிசிஐ தகவல்

ஆர்சிபி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஐபிஎல் கோப்பையை வென்றது.
IPL cup
Published on

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் கடந்த மே 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ஆர்சிபி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

இதற்கிடையே, அடுத்த ஐபிஎல் தொடர் குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

அடுத்த சீசனில் அணிகளின் எண்ணிக்கை 12 ஆகவும், போட்டிகளின் எண்ணிக்கை 94 ஆகவும் உயர்த்தப்படும் என சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவியதால் அடுத்த ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.

இந்நிலையில், கோடை வெப்பத்திலிருந்து வீரர்களையும் ரசிகர்களையும் பாதுகாக்கும் வகையில், 2027-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரை முன்னதாக, இரு வாரங்களுக்கு முன் அதாவது மார்ச் 10 அல்லது 15-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com