ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: ரேணுகா சிங் விலகல்- இளம் வீராங்கனைக்கு வாய்ப்பு

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: ரேணுகா சிங் விலகல்- இளம் வீராங்கனைக்கு வாய்ப்பு
Published on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

இதனையடுத்து இரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர் காயம் காரணமாக விலகியுள்ளார். பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்தப் போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் காஷ்வீ கௌதம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரேணுகா, உள்நாட்டுப் போட்டிகளிலும், மகளிர் ஐபிஎல் தொடரிலும் தனது அபாரமான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேணுகா சிங் இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை பூஜா வஸ்த்ராகர் மற்றும் அறிமுக வீராங்கனை காஷ்வீ கௌதம் ஆகியோர் வழிநடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com