3வது போட்டியில் வெற்றி: நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்கதேசம்

நஜ்​முல் ஹொசைன் ஷான்டோ 2 சிக்​சர், 9 பவுண்​டரியு​டன் 105 ரன்கள் குவித்தார்.
3வது போட்டியில் வெற்றி: நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்கதேசம்
Published on

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியை நியூசிலாந்தும், 2வது போட்டியை வங்கதேசமும் வென்றதால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்நிலையில், இரு அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் போட்டி சட்டோகி​ராமில் நேற்று நடந்தது.

முதலில் பேட் செய்த வங்​கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்​கெட்​டுக்கு 265 ரன்​கள் சேர்த்​தது. நஜ்​முல் ஹொசைன் ஷான்டோ 2 சிக்​சர், 9 பவுண்​டரியு​டன் 105 ரன்கள் குவித்தார். லிட்​டன் தாஸ் ஒரு சிக்சர், 3 பவுண்​டரியு​டன் 76 ரன்​கள் சேர்த்​தார்.

நியூசிலாந்து அணி சார்​பில் வில் ரூர்க் 3 விக்​கெட்டும், பென் லிஸ்​டர், ஜெய்​டன் லெனாக்ஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 266 ரன்​கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்​குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 44.5 ஓவரில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டீன் பான்ஃகி​ராப்ட் 75, நிக் கெல்லி 59 ரன்​கள் சேர்த்​தனர்.

வங்​கதேசம் சார்பில் முஸ்தபிசூர் ரகு​மான் 5 விக்​கெட் வீழ்த்​தி​னார். நஹித் ராணா, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்​பற்​றினர்.

இதனால் 55 ரன்​ வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற வங்​கதேச அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரை 2-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com