ஐசிசி-யின் மே மாதத்திற்கான சிறந்த விருதை வென்றார் வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹிம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் மே மாதத்திற்கான விருதை வங்கதேசம் வீரர் முஷ்பிகுர் ரஹிம் வென்றுள்ளார்.
முஷ்பிகுர் ரஹிம்
முஷ்பிகுர் ரஹிம்
Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மாதந்தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி வங்கதேசம் அணியின் முஷ்பிகுர் ரஹிம் மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 எனக் கைப்பற்றியது. இந்த தொடரில் முஷ்பிகுர் ரஹிம் 253 ரன்கள் குவித்து முக்கிய பங்கு வகித்தார். அதனால் ஐசிசி இவரை தேர்வு செய்துள்ளது. இதற்கு முன்னதாக 2021-ம் ஆண்டு முஷ்பிசுர் ரஹிம் மாத விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தைஜுல் இஸ்லாம்

வங்கதேச சக வீரர் தைஜுல் இஸ்லாம் மற்றும் நேபாளம் ஆல்-ரவுண்டர் தீபேந்திர சிங் ஏய்ரீ ஆகியோர் முஷ்பிகுர் ரஹிம் உடன் போட்டியில் இருந்தனர். இருவரையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com