

பாகிஸ்தான் அணி சமீபத்தில் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.
முதல் டெஸ்டில் 104 ரன் வித்தியாசத்தில், இரண்டாவது டெஸ்ட்ல் 76 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய வங்கதேசம் தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியா முதலிடத்திலும், நியூசிலாந்து 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3வது இடத்திலும், இலங்கை 4வது இடத்திலும் உள்ளது. இந்தியா 6வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9 ஆகிய இடங்களில் உள்ளன.